இந்தியா

தலைமறைவான ரவுடி தேடப்படும் குற்றவாளியானார் 

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : குண்டாஸ் வழக்கில் கைதாகாமல் தலைமறைவான ரவுடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் ஜனா (எ) ஜனார்த்தனன்,35; ரவுடியான இவர் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால், இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 15ம் தேதி கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பேரில் திருபுவனை போலீசார், ஜனாவை கைது செய்ய முயன்றார்.ஆனால், அவர் தலைமறைவானார். அதனால், அவர் கலெக்டர் முன் ஆஜராக நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுவரை அவர் கலெக்டர் முன் ஆஜராகாததால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X