இந்தியா

போதை பொருள் விற்பனை முதல்வர் எச்சரிக்கை

Added : டிச 05, 2019
Share
Advertisement
புதுச்சேரி : குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரியில் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் குட்கா விற்பனை செய்து இளைஞர்களின்

புதுச்சேரி : குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரியில் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் குட்கா விற்பனை செய்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக புகார் வந்துள்ளது. கடைகளில் எக்காரணம் கொண்டும் குட்கா உள்ளிட்ட எந்தவிதமான போதை பொருளும் விற்பனை செய்யக்கூடாது.காரைக்காலில் குட்கா என்ற பெயரில் போதை பொருட்களையும், புகையிலை என்ற பெயரில் குட்கா விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வியாபாரிகள் எக்காரணம் கொண்டும் எந்த விதமான கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கடைகளில் போலீசார் சோதனை நடத்தி, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன். மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X