தமிழ்நாடு

பழமையான அரசு கட்டடங்கள் கணக்கெடுப்பு புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு

Added : டிச 05, 2019
Advertisement
 பழமையான அரசு கட்டடங்கள் கணக்கெடுப்பு புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு

மதுரை :மதுரை மாவட்ட உள்ளாட்சிகளில் இடியும் நிலையிலுள்ள கட்டடங்களை கணக்கெடுக்க ஊரக வளர்ச்சித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டடங்கள் கட்டவும் முடிவு செய்துள்ளது.

இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்குட்பட்ட 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1600 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி மன்றம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, துவக்கபள்ளி கட்டடங்கள் ஊரக வளர்ச்சி முகமை மூலம் கட்டப்படுகின்றன. சில கிராமங்களில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், ஊராட்சி மன்ற கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள் மோசமாக இடியும் நிலையில் இருப்பதாக கிராமத்தினர் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். அதையடுத்து 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா மேற்பார்வையில் ஆய்வு நடந்தது. செயற்பொறியாளர் அனுராதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் செல்லத்துரை தலைமையில் பி.டி.ஓ.,க் கள் இதில் ஈடுபட்டனர். இருபதாண்டுகளுக்கு முன் 212 கட்டடங்கள் கட்டப்பட்டதும், அதில் ஏழு கட்டடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் சில கட்டடங்கள் இடியும் நிலையிலுள்ளன.அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கட்டுமான விதிகளுக்குட்பட்டு காலக்கெடு முடிந்த கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இடியும் நிலையிலுள்ள கட்டடங்களுக்கு அரசிடம் நிதி பெற்று புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X