இந்தியா

அரசு உயர்நிலை பள்ளியில் வானவியல் பயிற்சி முகாம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவியல் பயிற்சி முகாம், நடந்தது.நவநிர்மிதி அறிவியல் நிறுவனமும், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விஞ்ஞான் பிரசார் விப்நெட் கலிலியோ அறிவியல் மையம் சார்பில் கண்ணபிரான், நவநிர்மிதி அறிவியல் நிறுவனம் சார்பில் பூஜா மற்றும் விபா, புதுவைமாநில

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவியல் பயிற்சி முகாம், நடந்தது.

நவநிர்மிதி அறிவியல் நிறுவனமும், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விஞ்ஞான் பிரசார் விப்நெட் கலிலியோ அறிவியல் மையம் சார்பில் கண்ணபிரான், நவநிர்மிதி அறிவியல் நிறுவனம் சார்பில் பூஜா மற்றும் விபா, புதுவைமாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் வரும் 26ம் தேதி நிகழவிருக்கும் வளைய சூரிய கிரகணம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினர்.

சூரிய கிரகணத்தின்போது செய்ய வேண்டியவைகளைப் பற்றியும் மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றியும் தகவல்கள் பறிமாறப்பட்டன. மேலும், பகல் நேர வானவியல் செயல்பாடுகள், இரவு வான் நோக்கல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாயாஜாலக் கண்ணாடி, ஊசிதுளை கேமரா, கண்ணாடி மூலம் ஒளிக்குவியல், நானோ சூரியக் குடும்பம், கிரகணம் தொடர்பான அறிவியல் விளக்கங்கள் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் ராஜ்குமார், சுப்ரமணியன், ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற பொறுப்பாளர் அருண் நாகலிங்கம், அன்பரசன், முருகன், ரஞ்சித், ஜெயகுரு, புஷ்பராஜ், ஜெயகிருஷ்ணா ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் 180 மாணவர்கள் வானவியல் தொடர்பான பயிற்சிகளை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X