புதுச்சேரி : கோரிமேட்டில் கார் பார்க்கிங் தகராறில் காவலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் சந்துரு,31; ஜிப்மர் மருத்துவமனை காவலாளியான இவர் கடந்த 1ம் தேதி அங்குள்ள பார்க்கிங் ஏரியாவில்பணியில் இருந்தார்.அப்போது இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு காரை எடுத்து வந்த அரியாங்குப்பம், ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம் வீதியை சேர்ந்த கலையரசனை,28; சந்துரு தடுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்தைகலையரசன் பணியில் இருந்தஜிப்மர் காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தான் கையில் போட்டிருந்த இரும்பு காப்பால் தாக்கினார்.இதுகுறித்து சந்துரு அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, கலையரசன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.