சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டியை சேர்ந்தவர் பலி

Added : டிச 05, 2019
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாணடிக்குப்பம், வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், 38; செராமிக் டிப்ளமோ முடித்துள்ள இவர், கடந்த 2017ம் ஆண்டு, சூடான் நாட்டில் உள்ள செராமிக் கம்பெனியில் சேர்ந்து, வேலை செய்து வந்தார். இந்நிலையில், இந்த கம்பெனியில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்தனர். இதில், ராஜசேகர் தீக்காயம் ஏற்பட்டு

கடலுார்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாணடிக்குப்பம், வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், 38; செராமிக் டிப்ளமோ முடித்துள்ள இவர், கடந்த 2017ம் ஆண்டு, சூடான் நாட்டில் உள்ள செராமிக் கம்பெனியில் சேர்ந்து, வேலை செய்து வந்தார். இந்நிலையில், இந்த கம்பெனியில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்தனர். இதில், ராஜசேகர் தீக்காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார் என, அவரது மனைவி கலைசுந்தரிக்கு தகவல் வந்தது. இதையறிந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து ராஜசேகரின் உறவினர்கள், கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து, ஒரு மனு கொடுத்தனர்.அதில், சூடான் நாட்டு கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ராஜசேகர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகர் இறந்தது உண்மையானால், அவரது உடலை சொந்த ஊரான மாணடிக்குப்பத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X