பொது செய்தி

தமிழ்நாடு

'பதில் சொல்லுங்க, 'நாசா' செல்லுங்க! வினாடி-வினாவில் மாணவர்கள் அசத்தல்

Added : டிச 05, 2019
Advertisement
 'பதில் சொல்லுங்க, 'நாசா' செல்லுங்க! வினாடி-வினாவில் மாணவர்கள் அசத்தல்

உடுமலை:'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நடத்தப்படும் வினாடி-வினா போட்டியின் கால் இறுதிச்சுற்றில், பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று அசத்தினர்.

'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, பள்ளிகளில், 'பதில் சொல், அமெரிக்கா செல்' என்ற தலைப்பில் மெகா வினாடி-வினா போட்டி நடத்தி வருகிறது.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதன்படி 'தினமலர்', கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம், எஸ்.எஸ்.வி. எம்.,கல்வி நிறுவனம், லாட்டி காப்பி பைட் நிறுவனம் இணைந்து வினாடி-வினா போட்டியை, நேற்று, பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., மேல் நிலைப் பள்ளி மற்றும் என்.வி.,மெட்ரிக் பள்ளியில் நடத்தின.

ஆர்.ஜி.எம்., மேல் நிலைப்பள்ளியில் தகுதிச்சுற்றுக்கான முதற்கட்ட பொது அறிவு எழுத்துத்தேர்வு போட்டியில், 600 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மதிப்பெண்கள் அதிகம் எடுத்து, 16 பேர், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு காலிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் முன்னிலையில், மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட காலிறுதிப்போட்டி நடந்தது.

இதில், 'எப்' அணியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள், தரணேஷ் மற்றும் யஸ்வந்த் வெற்றி பெற்று, அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் லட்சுமி, பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

காலிறுதிச்சுற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஆசிரியர்கள், ராஜேஸ்வரி மற்றும் சவிதா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.என்.வி., மெட்ரிக் பள்ளிதொடர்ந்து, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது. இப்பள்ளியில், தகுதிச்சுற்றுக்கான முதற்கட்ட பொது அறிவு எழுத்துத் தேர்வில், 221 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்று, 16 மாணவர்கள், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மூன்று சுற்றுகளாக காலிறுதிப்போட்டி நடந்தது. மாணவர்கள், ஆர்வத்தோடு பதில் அளித்தனர். இதில், 'ஏ' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மோகன்ராஜ் மற்றும் மணிகண்டன், 35 மதிப்பெண்கள் எடுத்து, வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அன்னபூரணி, பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். காலிறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் பவித்ரா தேவி மற்றும் ஷீலா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X