மதுரை, மதுரை சமூக நலத்துறை அன்னை சத்யா நினைவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவியர்களுக்கான திருக்குறள் போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். அனைத்து மாணவியருக்கும் கைக்கடிகாரங்களை எல்.ஐ.சி., சட்ட ஆலோசகர் மலைச்சாமி வழங்கினார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் ஸ்ரீதர், ஸ்டாலின், பிச்சுமணி பங்கேற்றனர். காப்பக கண்காணிப்பாளர் தைலம்மாள் நன்றி கூறினார்.