மதுரை :மதுரையில் கலெக்டர் வினய் கூறியதாவது: வைகை நீர்பிடிப்பில் மழை பெய்வதால் வைகை அணை நீர் மட்டம் நேற்று 67 அடியை தொட்டது. மொத்த அடி 71 அடி. அணை 69 அடியை எட்டியதும் வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும். வைகை கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் கூடாது. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்களில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE