மதுரை, மேலுார் வெள்ளரிப்பட்டியில் விவசாய நிலங்களில் நீர் வளத்தை காப்பதற்கான வேளாண் தொழில் நுட்பங்கள், சாகுபடி முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.வேளாண்மை கல்லுாரி இணை பேராசிரியர் சீனிவாசன் நீர்வள தொழில்நுட்பங்களை விளக்கினார். நெல் வயல்களில் பானி குழாய் வைத்து பாசனநீர் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் புதிய மாற்றுமுறை காய்ச்சல், பாய்ச்சல் பாசனம், நீர் நில வளத்திற்கான பசுந்தாள் பயிர் நெல் பயறு வகைப்பயிர் சுழற்சி முறை, சொட்டு நீர் பாசன முறையில் வாழை மற்றும் கரும்பு சாகுபடி முறை, வறட்சியை தாங்கிவளரும் நெல் ரகங்கள் குறித்தும் விளக்கினார். ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர்கள் விக்னேஷ், பாலமுருகன், பிரேமா செய்தனர்.