போபால்: மத்தியபிரதேசத்தில், லக்கி தீட்சித் என்ற இளைஞர் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
தன் மகனுக்கு ஏற்பட்ட சோகம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று யோசித்த அவரது தந்தை, தன் மகனுக்கான இரங்கல் கூட்டதில் வந்திருந்தவர்களுக்கு சொந்த காசில் வாங்கிய ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கினார். அவர்களிடத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லாதீர்கள் என்றும் உருக்கமாக வேண்டிக்கொண்டார். இதுதொடர்பான, காட்சிகளை பலரும் தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE