தமிழ்நாடு

வெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்கள் பாதுகாக்க வேளாண் துறை 'டிப்ஸ்'

Added : டிச 05, 2019
Advertisement

மதுரை, மதுரையில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் வெள்ளத்தில் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயத்தை தவிர்த்து விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை, ஜிங்க் சத்து குறைபாடு ஏற்பட்டு இளம் மஞ்சள் அல்லது மஞ்சள் நிறமாக மாறும். அப்போது தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் இலை வழி உரமிட வேண்டும்.பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டி.ஏ.பி.,யை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கை தெளிப்பான் மூலம் இணைய வழி உரமிடலாம். தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ வினை ஒரு நாள் இரவு கலந்து வைத்து, அதில் 17 கிலோ பொட்டாஷ் கலந்து (எம்.ஓ.பி.) மேலுரமிட வேண்டும்.அதிக நாள் நீரில் மூழ்கும் பயிரில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு, பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், இலை உறை கருகல் நோய் போன்ற பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டால் நாற்றுகளை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். இயற்கை இடர்பாட்டால் பயிர் சேதத்தினை ஈடுசெய்ய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இணையலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X