பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் விலை உயர்வு; 450 பிரியாணி கடைகள் மூடல்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (29)
Advertisement
onion,briyani,வெங்காயம், விலை உயர்வு,பிரியாணி கடைகள், மூடல்

இந்த செய்தியை கேட்க

வேலுார்: வெங்காயம் விலை உயர்வால், 450 பிரியாணி கடைகள் மூடப்பட்ட நிலையில், 2,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்கள், பிரியாணிக்கு புகழ் பெற்றவை. இங்குள்ள, 1,200க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில், 5,000 பேர் வேலை செய்கின்றனர். வெங்காயத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம், 150 ரூபாய்; சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்றன.

பிரியாணி கடைகளில், மட்டன், சிக்கன் பிரியாணிக்கு, வெங்காய தயிர் பச்சடி வழங்கப்படும். விலை உயர்வால், 15 நாட்களாக, வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். பிரியாணி விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விற்பனை குறைந்து விட்டதாக, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட பிரியாணி கடை உரிமையாளர் சங்க தலைவர் அப்துல்லா கூறியதாவது:





வரலாறு காணாத விலை உயர்வால், வெங்காயம் தயிர் பச்சடி நிறுத்தப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, கால் பிளேட், 140 ரூபாயில் இருந்து, 170 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்து விட்டது. தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது; 450 பிரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரியாணி கடைகளில் வேலை செய்யும், 2,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201914:07:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரியாணி கடைகளை மூடிவிட்டால் டாஸ்மாக் வருமானமும் குறைந்துவிடுமே என்கிற கவலைதான். முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று தெருவிற்கு தெரு நான்கு பிரியாணி கடைகள் . உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.
Rate this:
Share this comment
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
05-டிச-201912:39:00 IST Report Abuse
R Ravikumar ஆடு என்ற பெயரில் நாய் கறியும் , பிராய்லர் கோழியும் சாப்பிடுவதற்கு .. மக்களே கொஞ்ச நாள் சாப்பிடாமல் இருங்கள் .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201914:51:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தயிர் என்ற பெயரில் யூரியாவும், சுண்ணாம்பும், சாக்கடை தண்ணியும் கலந்த பாலில் என்னமோ செய்து தயிராக்குகிறார்கள். ஐயோ பாவம்.....
Rate this:
Share this comment
Cancel
Shekar - Mumbai,இந்தியா
05-டிச-201912:08:27 IST Report Abuse
Shekar இதெல்லாம் பொய், வெங்காய தயிர் பச்சடிக்கு பதில், வெள்ளரி, தக்காளி, இஞ்சி போட்ட தயிர் பச்சடி கொடுக்கலாம். இதெல்லாம் ஊரை ஏமாற்ற, மற்றும் அதிக பணம்பண்ணும் நோக்கம் மட்டுமே
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201914:52:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பிரியாணி சாப்பிட்டே தீருவேன்னு அடம் பிடிக்கிறது தெரிகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X