மதுரை,:மதுரை உத்தங்குடி வழக்கறிஞர் பொன் கார்த்திகேயன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒத்தக்கடை கோதண்டராம சுவாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் 49 சென்ட் நிலம் ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ளது. ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, சில்வர் பட்டறை மற்றும் இறைச்சி கழிவுகளை குவிக்கின்றனர். சுற்றுச் சூழல் பாதிக்கிறது. திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சமூக விரோத சaெயல்கள் நடக்கின்றன. கழிவுகளை அகற்ற, கோயில் நிலத்தை பாதுகாக்ககோரி அரசுக்கு மனு அனுப்பினேன்.நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு: சுத்தப்படுத்த மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கோதண்டராமசுவாமி கோயில் செயல் அலுவலர், ஒத்தக்கடை ஊராட்சி தனி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச.,18ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.