கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை ரிங்ரோடு டோல்கேட் கட்டண வசூலுக்கு தடை கோரி மனு

Added : டிச 05, 2019
Advertisement

மதுரை :மதுரை ரிங்ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும்பணி நிறைவடையும்வரை, அதன் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை வண்டியூர் வழக்கறிஞர் விஜயராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 2000ல் உத்தங்குடி - கப்பலுார்வரை 25 கோடி ரூபாயில் ரிங்ரோடு அமைக்கப்பட்டது. டோல்கேட்கள் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி 2014 ல் 'டோல்கேட்'கள் மூடப்பட்டன.ரிங்ரோட்டை 243 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்ற 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ரிங்ரோடு மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டியில் டோல்கேட்டுகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் விதிகள் பின்பற்றப்படவில்லை. மதுரை- சிவகங்கை ரோடு சந்திப்பு மஸ்தான்பட்டி அருகே பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இது நிறைவடைய பல மாதங்கள் ஆகும். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால், டோல்கேட்டை வாகனங்கள் கடக்க தாமதமாகிறது. விபத்துக்கள் ஏற்படுகின்றன. மூன்று டோல்கேட்டுகளில் டூவீலர்கள், கனரக வாகனங்கள் செல்ல போதிய வசதிகள் இல்லை. ஓய்வறை, சர்வீஸ் ரோடு, சரக்குகள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை. கட்டண அறிவிப்பு பலகை இடம்பெறவில்லை. மஸ்தான்பட்டி, சிந்தாமணி டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டும்.மதுரை ரிங்ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும்பணி நிறைவடையும்வரை கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஜயராஜா குறிப்பிட்டுள்ளார். விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X