பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய 'கேங்மேன்' பதவிக்கு தகுதி தேர்வு: உடுமலையில் துவங்கியது

Added : டிச 05, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, பல்லடம், திருப்பூர் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள, கேங்மேன் பதவிக்கு, 2,016 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் உடற்தகுதி தேர்வு, பழநி ரோட்டிலுள்ள உடுமலை துணைமின்நிலைய வளாகத்தில், கடந்த, 2ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக, 2 மற்றும் 3ம் தேதி, நடக்க இருந்த தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று, (4ம் தேதி) முதல் அழைக்கப்பட்டிருந்த, விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடந்தது.தேர்வு அதிகாரிகள், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்ததோடு, உடற்தகுதி தேர்வுகளும் நடந்தன. எட்டு நிமிடத்தில் கம்பம் ஏறுதல், இரண்டு நிமிடத்தில் கம்பி மடித்துக்கட்டுதல், ஒரு நிமிடத்தில், 31.5 கிலோ பளு துாக்குதல் மற்றும் ஒரு நிமிடத்தில், நுாறு மீட்டர் ஓடுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.

நாள் ஒன்றுக்கு, 200 பேர் வீதம் பங்கேற்று வருகின்றனர். அழைப்புக்கடிதம் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 2 மற்றும் 3ம் தேதி, பங்கேற்க இருந்தவர்களுக்கு, தேதி குறித்து உரிய அறிவிப்பு வழங்கப்படும், என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X