பொது செய்தி

தமிழ்நாடு

குடிமங்கலம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள்

Added : டிச 05, 2019
Advertisement

உடுமலை:குடிமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையின்படி, கூடுதலாக ஒரு மாவட்ட கவுன்சிலர் வார்டு சேர்க்கப் பட்டுள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சி தலைவர், 201 ஊராட்சி வார்டுகள், 13 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் வார்டு இருந்தது.வாக்காளர் பட்டியலின்படி, ஒன்றிய குழு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டன. இதில், ஒன்றிய குழு வார்டுகளில், எல்லைகள் மட்டும் மறுவரையறை செய்யப்பட்டு, எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

ஆனால், ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு மட்டும் கூடுதலாக தற்போதைய தேர்தலுக்கு சேர்க்கப் பட்டுள்ளது. இதில், ஒரு வார்டு எஸ்.சி., பெண் பிரிவுக்கும், மற்றொரு வார்டு, பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தில், 32,422 ஆண், 34,535 பெண்கள், 5 பிறர் உட்பட 66 ஆயிரத்து 962 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X