மதுரை, டிச.5-
மதுரையில் சம்பா நெல்லுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய டிச.,15 கடைசி நாள்.கலெக்டர் வினய், வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: 2019-20 ஆண்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரை இத்திட்டத்தின் கீழ் டிச.,15க்குள் பதிவு செய்ய வேண்டும்.ஏக்கருக்கு ரூ.442.50 காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும். முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம்,வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் உடன் விண்ணப்பிக்கலாம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE