பொது செய்தி

தமிழ்நாடு

முழு வளைய சூரியகிரகணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பள்ளி, கல்லூரிகளில் நடத்த திட்டம்

Added : டிச 05, 2019
Advertisement

உடுமலை:கோவை எஸ்.என்.எம்.வி.,கல்லுாரியின் சார்பில், இம்மாதம் நிகழ உள்ள முழு வளைய சூரிய கிரகணம் பார்வையிடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

இம்மாதம், 26ம்தேதி முழு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்நிகழ்வு, இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளை விடவும், கோவை திருப்பூர் மாவட்டங்களில் மிகத்தெளிவாக காட்சியளிக்க வாய்ப்புள்ளதாக, இயற்பியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனை காண்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை, கோவை, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி இயற்பியல் துறையினர் மற்றும் ஓபன் ஸ்பேஷ் பவுண்டேஷன் இணைந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விருப்பமுள்ள பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர், 8523909178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இயற்பியல் பேராசிரியர் லெனின் பாரதி கூறுகையில், '' பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, இந்த அரிய நிகழ்வுகள் குறித்த விளக்கம் அளிக்கும் போது, கிரகணங்கள் குறித்து பல ஆய்வுகளில் அவர்களை ஆர்வம் பெறச்செய்ய முடியும். மேலும், கிரகணங்கள் குறித்து பல அறிவியல் தகவல்களை அறியும் வாய்ப்பாகவும் இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X