திண்டுக்கல், டிச.5-தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களுக்கான 'பதில் சொல் அமெரிக்கா செல்' வினாடி வினா போட்டி வத்தலக்குண்டு கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நேற்று நடந்தது.மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ் 'பட்டம்' பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியைஅமிர்தா விஸ்வ வித்யாபீடம், போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டோ காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்துகின்றன.வத்தலக்குண்டு கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த போட்டியில் துவக்கமாக எழுத்து தேர்வை 6 முதல் 9 ம் வகுப்பு வரையுள்ள 169 மாணவர்கள் எழுதினர். அதில் சிறந்த 16 பேரை ஆசிரியர் குழுவினர் தேர்வு செய்ய வினாடி வினா போட்டி நடந்தது. மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு பங்கேற்றனர். ஆசிரியர் கார்த்திக் போட்டியை நடத்தினார். 'இ' அணி மாணவர்கள் பி.சிவஸ்ரீ, எஸ்.ஏ.பிரஜிதா (8 ம் வகுப்பு) முதல் பரிசு, ஆர்.சூர்யா, ஜி.தேவ் கிேஷார் (9 ம் வகுப்பு) 2ம் பரிசு பெற்றனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழை பள்ளித் தாளாளர் கயல்விழி, முதல்வர் ரியா வழங்கினர். ஏற்பாடுகளை பட்டம் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ேஷாபியா செய்தார்.
அறிவை வளர்க்கலாம்'பட்டம்' பொது அறிவை வளர்த்து கொள்ள உதவுகிறது. அறிவியல், விஞ்ஞானம் உட்பட தெரியாத பல கேள்விகளுக்கு பதிலை பட்டம் மூலம் அறிந்து கொண்டேன். தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி பட்டம் படிப்பேன். இதனால் வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பட்டம் வாங்கி கொடுப்பதன் மூலம் சிறந்த பட்டதாரிகளை உருவாக்கலாம். பட்டம் போல் உயர்வாக பறக்கலாம்பி.சிவஸ்ரீ, 8ம் வகுப்பு.
உலகமே பட்டத்திற்குள்உலகமே தினமலர் பட்டத்திற்குள் அடங்கியுள்ளது. பல நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகங்களை பட்டம் தீர்த்து வைத்துள்ளது. நாட்டு நடப்புகள், பாடங்கள் மட்டுமின்றி பல அரிய தகவல்களை பட்டம் மூலம் அறிந்து கொண்டேன். பட்டம் படிப்பதன் மூலம் புதுநம்பிக்கை கிடைத்தது. பொது அறிவு தொடர்பாக என்ன கேள்வி கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியும். மாணவர்களுக்கான படைப்பை வெளியிடுவதற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி.எஸ்.ஏ.பிரஜிதா, 8ம் வகுப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE