பொது செய்தி

தமிழ்நாடு

நுாலக கட்டடத்தில் மழை நீர்

Added : டிச 05, 2019
Advertisement
 நுாலக கட்டடத்தில் மழை நீர்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், இடிந்து விழும் நிலையில் உள்ள நுாலக கட்டடத்தில், மழை நீர் கசிவதால், வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில், வட்டார முழு நேர கிளை நுாலகம் உள்ளது. இங்கு, 57 ஆயிரம் புத்தகங்கள், 5,000 உறுப்பினர்கள், 52 புரவலர்கள் உள்ளனர்.தினமும், 250 பேர், இந்த நுாலகத்திற்கு சென்று, நாளிதழ் மற்றும் புத்தகங்களை படிக்கின்றனர். இந்த நுாலக கட்டடம், விரிசல் ஏற்பட்டு, பலவீனமாக உள்ளது. மழைக்காலம் துவங்கி உள்ளதால், விரிசல் வழியே தண்ணீர் கசிகிறது.மழையில் ஊறி, கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்வதால், வாசகர்கள் அச்சமடைகின்றனர்.
இது குறித்து, வாசகர்கள் கூறியதாவது:நுாலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், நுாலகத்தில் உட்கார்ந்து படிக்கவே அச்சமாக உள்ளது.நுாலகம் அருகே, 18 அடி அகலம், 75 அடி நீளம் உடைய இட வசதி உள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன நுாலக கட்டடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X