தேசிய அளவிலான கடிதப்போட்டி

Added : டிச 05, 2019
Advertisement

திண்டுக்கல் ;இந்திய தபால் துறை சார்பில், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் தேசிய கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது.இந்திய தபால் துறை சார்பில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.'அன்புள்ள மகாத்மா, நீங்கள் அழியாதவர்' என்ற தலைப்பில் கடிதம் எழுத வேண்டும். 18 வயதுக்குட்பட்டோர், அதற்கு மேற்பட்டோர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.அனைத்து மொழிகளிலும் கடிதம் எழுதலாம். ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் ரூ.5 மதிப்புள்ள தபால் உறையிலும், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இன்லேண்ட் கவரிலும் எழுதலாம். அதனை 'தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், தமிழ்நாடு, சென்னை-600 002' என்ற முகவரிக்கு டிச.,31க்குள் அனுப்ப வேண்டும்.''மாநில அளவில் பரிசாக ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் ரூ.25ஆயிரம், இரண்டாமிடம் ரூ.10ஆயிரம், மூன்றாமிடம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10ஆயிரம் ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும்'' என, திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X