பொது செய்தி

தமிழ்நாடு

தென்னேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

Added : டிச 05, 2019
Advertisement
 தென்னேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

காஞ்சிபுரம்:ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான, தென்னேரி ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 909 ஏரிகளில், 223 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகள் மெல்ல நிரம்பி வருகின்றன.காஞ்சி, செங்கல்பட்டு, ஆகிய இரு மாவட்டங்களில், 16 ஏரிகள், மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில், முதன்மையானதாக, தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறுகிறது.இந்த ஏரியின், 18 அடி ஆழத்தில், 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்க முடியும். ஏரியின், மொத்தமுள்ள, 18 அடியும், தற்போது நிரம்பியுள்ளது.இதில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X