பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் திரிந்த கால்நடைகளை பிடித்துச் சென்ற மாநகராட்சி

Added : டிச 05, 2019
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 3 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அபராதம் செலுத்த தவறினால் ஏலம்விடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.திண்டுக்கல்லில் கால்நடை வளர்ப்போர் அவற்றை முறைப்படி கவனிக்காமல், கண்டபடி மேய்ச்சலுக்கு விடுகின்றனர். அவை வாகன போக்குவரத்து அதிகமுள்ள திருச்சி ரோடு, பழநி ரோடு பகுதிகளில் நடுரோட்டில் உலா வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.இதுதொடர்பான புகாரில் நேற்று மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உத்தரவுப்படி நகர்நல அலுவலர் அனிதா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் ரங்கராஜன், பாலமுருகன் ஆகியோர் ஆர்.எம்.,காலனி பகுதியில் ரோட்டில் திரிந்த 3 மாடுகளை பிடித்துச்சென்றனர். ''அவற்றுக்கு ரூ.3ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தவறினால் கோசாலையில் விடப்படும். தொடர்ந்து ரோட்டில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டால் மாடுகளை ஏலம்விடவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன. 'இந்த நடவடிக்கை தொடரும்' என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X