பாப்பான்குளம் கோவிலில் மகா தீப ஜோதி திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாப்பான்குளம் கோவிலில் மகா தீப ஜோதி திருவிழா

Added : டிச 05, 2019
Share
உடுமலை:பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மகா தீப ஜோதி திருவிழா வரும், 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தில், ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்து உள்ளது. கோவிலில், வரும், 10ம் தேதி கார்த்திகை மகா தீப ஜோதி விழா நடக்கிறது.இதையொட்டி, பகல், 11:30 மணிக்கு, மூலவர் அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு உற்சவர்

உடுமலை:பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மகா தீப ஜோதி திருவிழா வரும், 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தில், ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்து உள்ளது. கோவிலில், வரும், 10ம் தேதி கார்த்திகை மகா தீப ஜோதி விழா நடக்கிறது.இதையொட்டி, பகல், 11:30 மணிக்கு, மூலவர் அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு உற்சவர் அபிேஷகமும், மாலை, 6:30 மணிக்கு மகா தீப ஜோதி தரிசனமும், இரவு, 7:00 மணிக்கு திருவீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X