பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலால் விடுமுறை வகுப்பு பாதிப்பு

Added : டிச 05, 2019
Advertisement

உடுமலை:உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1, 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைகளின் போது, பள்ளி நேரம் அடிப்படையில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். அரையாண்டு தேர்வில், பாடத்திட்டம் முழுவதற்கும் தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின்னர், பொதுத்தேர்வுக்கான பயிற்சித் தேர்வுகள்
துவங்குகின்றன.

இந்த பயிற்சி தேர்வுகளில், மாணவர்களின் தவறுகளை திருத்திக்கொள்வதற்கும், பொது தேர்வை எதிர்கொள்வதற்கும், கற்றலில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி
அளிப்பதற்கும், அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது, நடப்பு கல்வியாண்டில், இந்த விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிக்கு,டிச., 30ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தேர்தல் பணிகள் குறித்து, தேர்தலுக்கு முன்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்.அரையாண்டு தேர்வு
விடுமுறையில் தேர்தல் நடக்கிறது. பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் இருப்பதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் எண்ணுகின்றனர்.இதனால், சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X