சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயலில் புகுந்த மழை நீர்

Added : டிச 05, 2019
Advertisement
 வயலில் புகுந்த மழை நீர்

சின்னிவாக்கம்:வட கிழக்கு பருவ மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அழுகும் முன், அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வாலாஜாபாத் அடுத்த, சிங்காடிவாக்கம், மருதம், புதுப்பாக்கம், கோவிந்த வாடி உள்ளிட்ட பல கிராமங்களில், 1,520 ஏக்கர் நிலத்தில், ஆகஸ்ட் மாதம், விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், வயலில் தண்ணீர் தேங்கி, நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.இது குறித்து, ஓடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் கள், வட கிழக்கு பருவ மழையால் நிலத்தில் சாய்ந்துவிட்டன. வயலில் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு, வயலில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி உள்ளோம்.தண்ணீரில் மூழ்கிய பயிர் கள் அழுகிவிடும் என்பதால், அவசர அவசரமாக அறுவடை செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X