பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் பள்ளிக்கு உதவி வழங்கும் விழா

Added : டிச 05, 2019
Advertisement
 அரசு மகளிர் பள்ளிக்கு உதவி வழங்கும் விழா

திருப்போரூர்:திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாவட்டத்திலேயே அதிக மாணவியர் பயிலும் பள்ளிகளில் ஒன்று.கொத்திமங்கலம், நெரும்பூர், வீராபுரம் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.

இங்கு, கணினி பிரிவு வகுப்பில் மட்டும், 400க்கும் அதிகமான மாணவியர் இருக்கின்றனர்.ஆனால், இவர்களுக்கு ஏற்ப கணினிகள் இல்லை; இருக்கும் கணினிகளும் பழுதடைந்து உள்ளன. இதனால், மாணவியருக்கு கணினி பயிற்சி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், கணினி ஆசிரியை ஒருவர், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினரிடம், பள்ளிக்கு கணினிகள் வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, நலச்சங்க உறுப்பினர்கள் இணைந்து, சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், இரண்டு மானிட்டர், கீ - போர்டுடன் கூடிய இரண்டு கணினிகளை வாங்கி, தலைமை ஆசிரியை செந்தமிழ் செல்வியிடம், நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X