பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் நாட்டிய விழா அர்ச்சுனன் தபசு முன் நடக்குமா?

Added : டிச 05, 2019
Advertisement
 மாமல்லபுரம் நாட்டிய விழா அர்ச்சுனன் தபசு முன் நடக்குமா?

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நாட்டிய விழாவை, அர்ச்சுனன் தபசு சிற்ப பகுதியில் நடத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல்லவர் கால சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது.உள், வெளிநாட்டுப் பயணியர், சிற்பங்கள் கண்டு களிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணியர், ஆண்டில், நவ., துவங்கி, சில மாதங்கள், இங்கு குவிகின்றனர். இந்திய, பாரம்பரிய, நாட்டுப்புற கலைகளை விரும்பி ரசிக்கின்றனர்.இவர்கள் ரசனைக்காக, தமிழக அரசு, மத்திய சுற்றுலாத் துறை உதவியுடன், ஆண்டுதோறும், டிசம்பர் - ஜனவரியில், மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நடத்துகிறது.விழாவில், பரதம், குச்சிப்புடி, மோகினி, ஒடிசி உள்ளிட்ட பல மாநில பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி, சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை, கலைஞர்கள் நிகழ்த்துவர்.தி.மு.க., ஆட்சியின்போது, அர்ச்சுனன் தபசு சிற்பம் முன்புறம், அழகிய சிற்ப காட்சி பின்னணியில் நாட்டிய விழா நடத்தப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில், கடற்கரைக் கோவில் அருகாமை, புல்வெளி பகுதியில் நடக்கும். பல ஆண்டுகளாக, இப்பகுதிகளிலேயே விழா தொடர்கிறது. இங்கு, கடற்கரை குளிர்காற்று பாதிப்பால், பயணியர் துவக்க நாட்களில் மட்டும் ஆர்வம் காட்டி, பிறகு வர தயங்குகின்றனர்.

இதனால், விழா வெறிச்சோடியே காணப்படும். தமிழக பயணியர், உள்ளூர் மக்களும் வருவதில்லை. அர்ச்சுனன் தபசு பகுதியில் விழா நடந்தால், பயணியர் விரும்பி வருவர்; உள்ளூர் மக்களும் திரண்டு, விழா களைகட்டும்.சுற்றுலாத்துறை இச்சூழலை உணர்ந்து, துவங்கவுள்ள டிசம்பர் - ஜனவரி விழாவை, அர்ச்சுனன் தபசு பகுதியில் நடத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X