பொது செய்தி

தமிழ்நாடு

அபாயம்! பாலாறு, ஏரிகளில் குளிக்க, துவைக்க கூடாது.... விழிப்புணர்வு, அறிவிப்பு பலகை அவசியம்

Added : டிச 05, 2019
Advertisement
 அபாயம்! பாலாறு, ஏரிகளில் குளிக்க, துவைக்க கூடாது.... விழிப்புணர்வு, அறிவிப்பு பலகை அவசியம்

செங்கல்பட்டு:கன மழையால் நிரம்பி ஓடும் பாலாறு, ஏரி தண்ணீரை பார்க்க செல்வோர், தவறி விழுந்து இறக்கும் அபாயம் உள்ளது. ஆதலால், நீர்நிலை பகுதிகளில், குளிக்க, துவைக்க தடை இருப்பது குறித்த அறிவிப்பு பலகையை, மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த, 2015ம் ஆண்டு பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், மிகவும் பாதிக்கப்பட்டன.பாலாற்றின் இரு கரைகளை தொட்டு ஓடிய மழை வெள்ளம், ஊருக்குள் புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது.வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி ஈசா ஏரி உட்பட, 22க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர், செங்கல்பட்டு நீஞ்சல் மடுவு அணைக்கட்டுக்கு வந்தது.இங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர், புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில், மொத்தமாக சூழ்ந்தது.அதிர்ச்சிபொருட்கள் சேதத்தை விட, 35க்கும் மேற்பட்டோர் இறந்தது தான், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவர்களில் பல பேர், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி ஓடுவதை பார்க்க சென்று, நீரில் மூழ்கி இறந்தவர்கள்.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில நாட்களாக, வாலாஜாபாத், பாலுார், திருக்கச்சூர் உட்பட, 25க்கும் மேற்பட்ட இடங்களில், பலத்த மழை பெய்தது.
இதனால், பல ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேறி, நீஞ்சல் மடுவு அணைக்கட்டு வழியாக, களத்துாரான் கால்வாய் மற்றும் பாலாறுக்கு தண்ணீர் செல்கிறது.நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை பார்க்க, பொதுமக்கள் பலர் சென்று வருகின்றனர். சிலர் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர்.மாணவர்கள் பலிஇதில், 2ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், சோமங்கலம் பெரிய ஏரியில், பழந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன், மீன் பிடிக்க சென்று, நீரில் மூழ்கி பலியானான்.3ம் தேதி, பாலுார் பாலாற்றில் ஓடும் தண்ணீரை பார்க்க சென்ற பள்ளி மாணவன், நீரில் மூழ்கி இறந்தான்.நவ., 3ம் தேதி, திருக்கழுக்குன்றம் தாலுகாவில், எடையத்துார் - இரும்புலிச்சேரி பாலாற்றில் குளித்த இரண்டு மாணவர்கள் இறந்தனர்.வடகிழக்கு பருவமழை முடிவதற்குள், மழையால் நிரம்பியுள்ள நீர்நிலைகளில் குளித்த, நான்கு பேர் இறந்துள்ளனர்.
இது போன்ற ஆபத்தை தடுக்க, நடவடிக்கை வேண்டும்.விழிப்புணர்வுகுறிப்பாக, பாலாறு மற்றும் மதுராந்தகம் ஏரி, ஈசூர் - வல்லிபுரம், கடலுார்- - வாயலுார் தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீரை பார்க்க, அதிக மக்கள் சென்று வருகின்றனர்.எனவே, நீர்நிலைகளில் ஏற்படும் இறப்பை தடுக்க, கிராம மக்களிடம், உயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பாலாறு மற்றும் ஏரிகளில் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X