கலங்கலில் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை சேகரிக்கும் விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலங்கலில் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை சேகரிக்கும் விவசாயிகள்

Added : டிச 05, 2019
 கலங்கலில் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை சேகரிக்கும் விவசாயிகள்

கொட்டவாக்கம்:கொட்டவாக்கம் ஏரி கலங்கலில் மணல் மூட்டைகளை அடுக்கி, விவசாயிகள் தண்ணீரை சேகரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், கொட்டவாக்கம் ஊராட்சியில், 350 ஏக்கர் பரப்பு உடைய பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சிற்றேரி உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, 450 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையால், ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.கலங்கலில் வெளியேறும் தண்ணீரை தடுக்கும் வகையில், விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.'மூட்டைகளை வைத்து தண்ணீர் தேக்கினால், பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்' என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X