பசுமை 'கொடி மரங்கள்' மின்வாரிய 'சாதனை!'

Added : டிச 05, 2019
Advertisement
 பசுமை 'கொடி மரங்கள்' மின்வாரிய 'சாதனை!'

பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் புறநகர், கிராமப்புறங்களில் மின்கம்பங்கள் பராமரிப்பின்றி 'கொடி மரங்களாக' காட்சியளிக்கின்றன.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களைச் சுற்றி புதர் கொடிகள் வளர்ந்து, கம்பம் முழுக்க மறைக்கும் அளவுக்குபடர்ந்து காணப்படுகிறது.இது, மின் வாரியம் பராமரிப்பில் காட்டும் மெத்தனத்தை பறைசாற்றுவதாக உள்ளது. இந்தாண்டு நன்கு பெய்த பருவமழைகளால், புதர் கொடிகள் செழித்து வளர்ந்து மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்த கொடிகள், மின்கம்பம் முழுக்க ஆக்கிரமிக்க பல மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கும். அவ்வளவு காலமும் குறிப்பிட்ட மின்கம்பங்கள் பராமரிக்கப்படவில்லை. இத்தனைக்கும், ஒவ்வொரு மாதமும் தவறாமல் மின்பாதை பராமரிப்பு பணி எனக்கூறிபகல் முழுக்க மின்தடை செய்யப்படுகிறது. இப்படி தரையில் இருந்து மின்கம்பிகள் வரை படர்ந்துள்ள கொடிகள் மூலம் மின்சாரம் பாய்ந்து, பொதுமக்கள், கால்நடைகள் மின்விபத்துக்குள்ளாகும் அபாயமும் நிலவுகிறது.இந்த 'கொடி மரங்களை' பராமரிப்பதில் மின்வாரியம் அக்கறை காட்ட வேண்டும் என்பதே,மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X