பொது செய்தி

தமிழ்நாடு

8ல் இலவச கண் சிகிச்சை முகாம்

Added : டிச 05, 2019
Advertisement


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், காஞ்சிபுரம் மாமல்லன் பள்ளியில், வரும், 8ம் தேதி, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை கண் பரிசோதனை நடைபெறுகிறது.இதில், தேவைப்படுவோருக்கு பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு, 97914 08768 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடும் விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர்கலாம் வழியில் உதவும் கரங்கள் குழு சார்பில்,ஒவ்வொரு தேசிய விழாக்கள், பண்டிகைகள், உலக தினத்தையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.அதன்படி, முத்தியால்பேட்டையில் உள்ள தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான உப கரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், மைய வளாகத்தில், பழ வகை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.கண்காட்சியில், துாய்மை இந்தியா, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க எளிய வழி முறைகள், தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ - மாணவர் காட்சிப்படுத்தியிருந்தனர்.
200 மூட்டை அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதும், அந்த இடத்தில் யாரும் இல்லை. இரு, 'டாடா மேஜிக்' வேன்கள் இருந்தன. இவற்றின் அருகே, 200 அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.இவற்றை பறிமுதல் செய்த போலீசார், குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், உலக எய்ட்ஸ் தின விழா நேற்று நடந்தது.அங்குள்ள விரிவுரையாளர் அரங்கில், உலக எய்ட்ஸ் தின விழாவையொட்டி, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி தலைமை ஏற்றார்.'எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்து, முழுமையாக அறிவேன். எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாகுவேன்' என, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
'குடி' மையத்திற்கு அபராதம்
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டாஸ்மாக், 'குடி'மையங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.நகராட்சி ஆணையர் சந்தானம் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் செல்வராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், பெரியகுப்பம், தலக்காஞ்சேரி பகுதிகளில் உள்ள, 'குடி' மையங்களில் சோதனை நடத்தினர்.இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை, சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இறைச்சிக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.இதில், 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், 8,200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X