மழையால் செங்கல் தயாரிப்பு பாதிப்பு:தொழிலாளர்கள் வேலை இழப்பு

Added : டிச 05, 2019
Advertisement
 மழையால் செங்கல் தயாரிப்பு பாதிப்பு:தொழிலாளர்கள் வேலை இழப்பு

ஆனைமலை:ஆனைமலை அடுத்த அர்த்தநாரிபாளையம், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில், பருவமழையால் செங்கல் சூளைகளில் தயாரிப்பு பணிகள் முடங்கி உள்ளன.

ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், 140க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயாராகும் செங்கல், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.செங்கல் சூளைகளில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால், செங்கல் தயாரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால், அதிக அளவிலான சூளைகளில் செங்கல் தயாரிப்பு பாதித்து உள்ளது. வெகு நாட்களாக வேலையின்றி பணியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:மழையில்லாத நேரத்தில், கட்டல் எனப்படும் செங்கல் அச்சில் செம்மண்ணை நிரப்பி, அதை உலர்த்தி வருகிறோம். சில நேரங்களில் கனமழை பெய்து, நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, அடுப்பு அமைத்து, தீ எரித்து, செங்கல் தயாரித்து விற்பனை செய்ய, ஏதுவான சூழல் இல்லை.பல செங்கல் சூளைகளில், பல நாட்களுக்கு முன்பு அடுப்பில் இருந்து எடுத்து செங்கல் விற்பனை செய்தபின், மீண்டும் அடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது.

தேவைக்கு ஏற்ப செங்கல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மழைக்காலம் முடியும் வரையில் செங்கல் தயாரிப்பு குறையும். வேலையின்றி பலரும், வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். மழைக்காலம் முடிந்தால் தான், செங்கல் தயாரிப்பு பணிகள் முழுமையாக நடக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X