சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் உடல் மீட்பு

Added : டிச 05, 2019
Advertisement

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, சோமங்கலம் அடுத்த பழந்தண்டலத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் கார்த்திக், 17; பிளஸ் 2 மாணவர்.இவர், நண்பர்களுடன் சேர்ந்து, சோமங்கலம் ஏரிக்கு, 2ம் தேதி சென்றார். அங்கிருந்த படகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஏரி நீரில் மூழ்கினார்.தொடர்ந்து தேடிய நிலையில், மாணவனின் உடலை, பேரிடர் மீட்பு படையினர், மூன்றாவது நாளாக நேற்று காலை மீட்டனர்.
லாரி மோதி இளைஞர் பலி
ஒரகடம்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், 26, விநாயகமூர்த்தி, 23. இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் தங்கி, அங்குள்ள, 'சிப்காட்' தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும், ஒரகடம்- - வாலாஜாபாத் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியது.இதில், செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயகமூர்த்தி, காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து, ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் குணசேகரன், 48. நேற்று முன்தினம், கீழ்தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, முதல் தளத்தில் குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில், இரு மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவை திறந்து, 5,000 ரூபாயை திருடி, துணிகளை கலைத்து கொண்டிருந்தனர்.சத்தம் கொடுத்தபடியே, குணசேகரன் இறங்கி வந்ததால், இரு மர்ம நபர்களும் தப்பி ஓடினர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, புதுராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிராஜ் மனைவி கவிதா, 30. கடந்த மாதம், 25ம் தேதி, கடைக்கு செல்வதாக கூறி சென்றார்; அதன்பின், வீடு திரும்பவில்லை.கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில், அவரது கணவர் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுக் கடையில் திருட முயற்சி
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில், சத்தியவேடு சாலையோரம், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில், மூன்று மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்தபடி, ஷட்டர் பூட்டுகளை உடைக்க முயன்றனர்.முடியாமல் போனதால், அபாய ஒலியின் இணைப்பை துண்டித்து, சுவரை இடித்து கொண்டிருந்தனர்.அபாய ஒலியை துண்டித்தபோது, கடை மேற்பார்வையாளர், கவரைப்பேட்டை எஸ்.ஐ., மகாலிங்கம் ஆகியோரின் மொபைல்போனுக்கு தகவல் சென்றது.அதை தொடர்ந்து, கவரைப்பேட்டை எஸ்.ஐ., மதுபான கடை நோக்கி சென்றார். போலீசார் வருவதை கண்டு, மூன்று மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு, கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ஈகுவார்பாளையம் கிராமத்தில், பாதிரிவேடு போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து, மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த இரண்டு ஓட்டுனர்களான அப்பாவரம் வெங்கடேசன், 32, பிரகாஷ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X