திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், மாவட்ட மற்றும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவோர், நவ., 15, 16ல், செங்கல்பட்டு அடுத்த பழவேலியில், கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, விருப்ப மனு கொடுத்த, 300க்கும் மேற்பட்ட கட்சியினரிடம், நேற்று ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடந்தது. திருப்போரூர் ஒன்றியசெயலர் குமரவேல் தலைமை வகித்தார்.தேர்தல் பொறுப்பாளர்களான, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலர் கமலக்கண்ணன், மாநில கலைப்பிரிவு செயலர் உதயகுமார் உள்ளிட்டோர், கட்சியினரிடம் நேர்காணல் நடத்தினர். வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து, கருத்து கேட்டனர்.தொடர்ந்து மாற்று கட்சியினர், 30க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.