சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆல மரம் விழுது கடத்த முயற்சி

Added : டிச 05, 2019
Share
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவில் வளாகத்தில், பழமையான ஆல மரத்தில், 40 அடி உயரம் உடைய விழுது ஒன்று வளர்ந்து இருந்தது.நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத சிலர், இந்த விழுதை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், வேரோடு பெயர்த்து எடுத்து, டிராக்டரில் கடத்த முயன்றனர்.இதைக் கண்ட அப்பகுதி மக்கள், டிராக்டரை மடக்கி பிடித்தனர். அப்போது, மரத்தை கடத்த முயன்றவர்கள்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவில் வளாகத்தில், பழமையான ஆல மரத்தில், 40 அடி உயரம் உடைய விழுது ஒன்று வளர்ந்து இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத சிலர், இந்த விழுதை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், வேரோடு பெயர்த்து எடுத்து, டிராக்டரில் கடத்த முயன்றனர்.இதைக் கண்ட அப்பகுதி மக்கள், டிராக்டரை மடக்கி பிடித்தனர். அப்போது, மரத்தை கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.இதையடுத்து டிராக்டரைமுற்றுகையிட்டு, அப்பகுதிவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி, 'மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X