காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையில் இரு வீடுகள் இடிந்தன. வீட்டில் இருந்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது பழைய ஓட்டு வீடு, நேற்று மாலை, திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.அதே போல், பஞ்சுப்பேட்டை பெரிய தெருவைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் வீட்டு பின் பகுதி சுவர், நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.குடும்பத்தில் உள்ளவர்கள் அடுத்த அறையில் படுத்து துாங்கியதால் பாதிப்பு ஏற்படவில்லை.சமீபத்திய மழையில் ஊறி, இந்த சுவர்கள் இடிந்ததாக கூறப்படுகிறது.