தமிழ்நாடு

மண்ணை காப்போம்!சர்வதேச தினத்தில் உறுதியேற்போம்:இயற்கையை காக்க முயற்சிப்போம்

Added : டிச 05, 2019
Advertisement
 மண்ணை காப்போம்!சர்வதேச தினத்தில் உறுதியேற்போம்:இயற்கையை காக்க முயற்சிப்போம்

ஆனைமலை:இன்று சர்வதேச மண் தினம்! இந்நாளில், நம்மை காக்கும் இயற்கையின் அங்கமான, மண்ணை காக்க உறுதியேற்போம், 'மண் மலடு' என்ற சொல்லையே அகராதியில் இருந்து அழிப்போம்.இயற்கையின் ஒரு அங்கமான, மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளவும், உயிர்கள் வாழ மண் வளத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், ஆண்டுதோறும் டிச., 5ம் (இன்று) தேதி, சர்வதேச மண் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும், மண் தினம் கொண்டாடினாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அறியாமையால், மண் மலடாகி வருகிறது.பார்க்கும் இடமெல்லாம் மண்ணில் ரசாயனம், பிளாஸ்டிக் கழிவுகள், விளைநிலங்களில் எல்லாம் ரசாயன பூச்சிக்கொல்லிகள் என பல்வேறு காரணங்களால், மண் வளம் தொடர்ந்து பாதிக்கிறது.உயர் விளைச்சல் பெற வேண்டும் என்பதற்காக, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால், மண் மலடாகி, அதில் உள்ள உயிர்த்தன்மை அழிந்து வருகிறது.

இந்நாளில், மண்ணை காக்க அனைவரும் உறுதியேற்போம், அனைத்து உயிர்களையும் காக்கும் மண்ணை பாதுகாப்போம்.பயிர்கள் விளையாதுஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜேஸ்வரி மற்றும் மண்ணியல் துறை உதவிப்பேராசிரியர் சுதாலட்சுமி ஆகியோர் கூறியதாவது:மண் அனைத்து பயிர்களுக்குமான உரத்தொழிற்சாலை. கோடிக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் தான், மண்ணுக்கு சத்துக்களை வழங்கி, நோய் தாக்குதல்களை குறைத்து பயிர்களை பாதுகாக்கிறது.

பயிர்களுக்கு தேவையான, 70 சதவீதம் சத்துக்கள் காற்றில் உள்ளன. காற்றில் இருந்து சத்துக்களை கிரகித்து, மண் தான் பயிர்களுக்கு கொடுக்கிறது. உரத்தில் உள்ள சத்தை கரைத்து, வேர் மண்டலம் மூலம் பயிர்களுக்கு வழங்குகிறது. இதற்கு, நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் உதவுகிறது.இப்படி மண்ணை காக்கும், நுண்ணுயிர்கள், மண்புழுக்கள், கட்டுப்பாடின்றி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

இதனால், தான், மண் தன்னுடைய உயிர் தன்மையை இழந்து, மலடாகி அழிந்து வருகிறது. விவசாயிகள் ரசாயனத்தை முடிந்த அளவு குறைத்துக்கொண்டு, இயற்கை உரங்களை பயன்படுத்தி, மண்ணை காக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு உயிர்த்தன்மை உள்ள சத்தான மண்ணை வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


உணவுச்சங்கிலி காணாமல் போகும்!

சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகள், மக்கிப்போக பல நுாறு ஆண்டுகள் ஆகிறது. மண்ணில் படலம் போன்று படிந்து, நிலத்தடி நீரை உள்ளே செல்ல விடாமல், பாதிப்பு ஏற்படுத்துகிறது. ரசாயனம் பயன்படுத்தும் மண்ணில், வெட்டுக்கிளி முதல் பறவைகள் வரையில் அனைத்து உயிர்களும் பாதிக்கிறது. இதனால், உணவுச்சங்கிலியே காணாமல் போகிறது.

மண் இல்லையேல் மனிதர்கள் இல்லை, ஒட்டுமொத்த உயிர்களும் இல்லை. ரசாயனத்தை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணில் வீசுவதை தவிர்த்து மறு சுழற்சிக்கு வழங்கி, நம்மை காக்கும் மண்ணை காக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X