சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரியின் கணவரை புரட்டி எடுத்த சம்பவம் வீடியோவில் வைரல்

Added : டிச 05, 2019
Share
Advertisement
-நமது நிருபர் -குடி போதையில், அக்காவை தாக்கிய மாமாவை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த பெண், 'புரட்டி' எடுத்த, 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புரசைவாக்கம், டவுட்டன் பாலத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர் சிவா, 25. இவரது மனைவி இந்து, 23. நவ., 28ம் தேதி, குடிபோதையில் வந்த சிவா, தன் மனைவி இந்துவை, சரமாரியாக தாக்கியுள்ளார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த இந்துவின் சகோதரி

-நமது நிருபர் -

குடி போதையில், அக்காவை தாக்கிய மாமாவை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த பெண், 'புரட்டி' எடுத்த, 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புரசைவாக்கம், டவுட்டன் பாலத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர் சிவா, 25. இவரது மனைவி இந்து, 23. நவ., 28ம் தேதி, குடிபோதையில் வந்த சிவா, தன் மனைவி இந்துவை, சரமாரியாக தாக்கியுள்ளார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த இந்துவின் சகோதரி சங்கீதா, சிவாவை, அருகில் இருந்த உருட்டு கட்டையால், சரமாரியாக அடித்து, புரட்டி எடுத்தார்.சிவாவை, அவர் வெளுத்து வாங்கிய பின், சங்கீதாவை ஒருவர் தடுத்து அழைத்துச் சென்றார். வலியில் அலறி துடித்த சிவா, சாலையில் அங்கும், இங்குமாக புரண்டார்.
சில நிமிடங்களில், மீண்டும் அதே கட்டையால், சிவாவை வெளுத்து வாங்கினார் சங்கீதா. இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.இது குறித்து, போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த குடும்பத்தினர், டவுட்டன் பாலத்தின் கீழ் பகுதியில், 15 ஆண்டுகளாக வசித்து வருவதும், இதுபோன்ற அடிதடி நிகழ்வு அடிக்கடி நடப்பதாகவும் தெரிய வந்தது.மேலும், சங்கீதா தாக்கியதில், சிவாவுக்கு ரத்த காயம் எதுவும் இல்லை. எல்லாம் உள்காயம் மட்டுமே என்பதாலும், போலீசில் எதுவும் புகார் அளிக்கப்படவில்லை என்பதாலும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லை என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X