பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை வரத்து குறைவு ஏலத்தில் விலை உயர்வு

Added : டிச 05, 2019
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், மழையால் வரத்து குறைந்தது; கொப்பரை விலை உயர்ந்தது.

ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 233 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 90.10 முதல், 98.50 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 193 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 56.55 முதல், 73.35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

மொத்தம், 426 கொப்பரை மூட்டைகளை, 76 விவசாயிகள் கொண்டு வந்தனர், 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு, 4.50 ரூபாய் உயர்ந்தது; 202 மூட்டைகள் வரத்து குறைந்திருந்தது.* வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 20 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.

கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சாரதா முன்னிலையில் ஏலம் நடந்தது. 10 மூட்டைகளில் இருந்த முதல் தர கொப்பரை கிலோ, 60.35 முதல், அதிகபட்ச மாக, 94 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாரம் தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 40.95 முதல், 61.65 ரூபாய்க்கு விற்பனையானது. ஏலத்தில், 20 விவசாயிகள், ஐந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கிலோவுக்கு நான்கு ரூபாய் அதிகரித்தது. மேற்பார்வையாளர் கூறுகையில், ''மழை காரணமாக, கொப்பரை உலர வைக்க முடியாத நிலை ஏற்பட்டு, கொப்பரை வரத்து குறைந்தது. தற்போது, மார்க்கெட்டில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், கொப்பரை விலை உயர்ந்தது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X