கொள்ளையர் 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையர் 5 பேர் கைது

Added : டிச 05, 2019

மாமல்லபுரம்:புதுப்பட்டினம் கடைகளில், 10 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் கொள்ளையடித்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
கல்பாக்கம், புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை, சுரேஷ் என்பவரின், ஹார்டுவேர் கடை, காமராஜ் என்பவரின், டயர் கடை ஆகியவற்றில், நவ., 21ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்பு, 1,400 கிலோ தாமிர கம்பி, பிற பொருட்களை கொள்ளையடித்தனர்.

கல்பாக்கம் போலீசார் விசாரணையில், இக்கொள்ளையில் ஈடுபட்டது, சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த, 23 - 50 ஐந்து பேர் என்பது தெரிந்தது.புதுப்பட்டினம் கொள்ளை மட்டுமின்றி, மாமல்லபுரம், செங்கல்பட்டு, சென்னை பகுதி, ஹார்டுவேர் கடைகளில், மேற்கண்ட ஐந்து பேரும் தொடர்ந்து கொள்ளையடித்தது தெரிந்தது.சென்னையில், 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், குண்டர் தடுப்பு காவலில், பலமுறை, சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிந்தது.போலீசார், அவர்களை கைது செய்து, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 கிலோ தாமிரகம்பி, 30 கிலோ பித்தளை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X