உழவர் சந்தையில் அடையாள அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் அடையாள அட்டை

Added : டிச 05, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி உழவர் சந்தையில், விளை பொருட்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி உழவர் சந்தை வேளாண் விற்பனை துறையின் நிர்வாகத்தில் இயங்குகிறது. இங்கு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல்,
நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் வகையில், 64 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 169 விவசாயிகள் விளைபொருட்களை விற்க அடையாள அட்டை பெற்றுள்ளனர். அதில், 120 பேர் திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், புதிதாக அடையாள அட்டை பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், புகைப்படம், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், என, உழவர் சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X