கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாங்காட்டுப்புதுார் சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில், நாளை, 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
கடந்த, 2ம் தேதி காலை மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று, மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை நடந்தது.
இன்று, 5ம் தேதி, காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விேஷச சக்தி, வேத பாராயணம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு விமான கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம் நடந்தது. நாளை, 6ம் தேதி, காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு, விநாயகர், மாகாளியம்மன் கோவில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கின்றனர். பின், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.