30 ஆண்டுகள் போராட்டத்துக்கும் தீர்வில்லை: அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

Added : டிச 05, 2019
Advertisement
 30 ஆண்டுகள் போராட்டத்துக்கும் தீர்வில்லை: அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

வால்பாறை:வால்பாறை சோலையாறு டேம் சத்யாகாலனியில், மக்கள் அடிப்படை வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறுடேம்.இங்குள்ள சத்யாகாலனியில், எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் வீடுகள் கட்டப்பட்டன. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

சத்யா காலனியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் வழியில் நடைபாதை இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. குடிநீர் கிடைக்காததால், பராமரிப்பின்றி பாழடைந்துள்ள கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால், இரவு நேரத்தில் சிறுத்தையும், பகல் நேரத்தில் பாம்புகளும் அதிகளவில் வருகின்றன. இதனால், பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.

மக்கள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையான, சோலையாறு அணை அருகில் இருந்தும் எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக நகராட்சி சார்பில் குடிநீர் வழங்காததால், கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.நகராட்சி சார்பில், சத்யா காலனியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு, இது வரை பட்டா வழங்கவில்லை. வால்பாறை நகராட்சியில் வரியை மட்டும் விடாப்பிடியாக வசூலிக்கும் அதிகாரிகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர தயக்கம் காட்டுகின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X