'டூ - வீலரில்' சாகச பயணம் கட்டுமானத்தில் கவனமில்லை

Added : டிச 05, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இரு மாநில இணைப்பு ரோட்டில், மேம்பால கட்டுமான பணி நடக்கும் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மண்மேடுகளில் ஆபத்தான சாகச பயணம் மேற்கொள்ளும் சூழல் நிலவுகிறது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் வடுகபாளையம் ரயில்வே கேட் பகுதியில், நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் பிரதான துாண்கள் அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.இதற்காக,
 'டூ - வீலரில்' சாகச பயணம் கட்டுமானத்தில் கவனமில்லை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இரு மாநில இணைப்பு ரோட்டில், மேம்பால கட்டுமான பணி நடக்கும் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மண்மேடுகளில் ஆபத்தான சாகச பயணம் மேற்கொள்ளும் சூழல் நிலவுகிறது.

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் வடுகபாளையம் ரயில்வே கேட் பகுதியில், நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் பிரதான துாண்கள் அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.இதற்காக, ரோட்டின் மையத்தில் வரிசையாக பிரமாண்டமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பள்ளம் தோண்டிய மண், ரோட்டின் குறுக்கே அடுத்தடுத்து வரிசையாக மேடாக குவிக்கப்பட்டுள்ளது.

மேம்பால பணி நடக்கும் பகுதியில், வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படும் நிலையில், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், மண் மேடுகள் மீது பைக்குகளை ஓட்டி, சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.மழை பெய்யும் போது, மண் மேடுகள் சேறாக மாறி, நிலைமை இன்னும் மோசமாகிறது. பொதுமக்கள் நலன் கருதி, கட்டுமான பணி நடக்கும் இடத்தில், கான்கிரீட் துாண்கள் உயர்ந்து வருவதால், ரோட்டை சமப்படுத்தி பாதுகாப்பான பாதை அமைத்து கொடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X