பட்னவிஸ் வழக்கு ஜன.,4க்கு தள்ளி வைப்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாக்பூர்: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்த வழக்கு விசாரணையை, புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜன., 4க்கு தள்ளி வைத்தது.பட்னவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்னவிஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல்
பட்னவிஸ் , வழக்கு  ஜன.,4க்கு தள்ளி வைப்பு

நாக்பூர்: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்த வழக்கு விசாரணையை, புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜன., 4க்கு தள்ளி வைத்தது.பட்னவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்னவிஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்கறிஞர் சதிஷ் உகே, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார்.


தள்ளுபடி


latest tamil news



இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்னவிசின் நாக்பூர் வீட்டிற்கு, கடந்த வாரம், 'சம்மன்' அனுப்பப்பட்டது.இந்நிலையில், நேற்று, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்னவிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதய் தாப்லே, ''தவிர்க்க முடியாத காரணங்களால், பட்னவிஸ் நேரில் வர முடியவில்லை; இவ்வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.


பிடிவாரண்ட்



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சதிஷ் உகே, ''நேரில் ஆஜராகக் கூடாது என, பட்னவிஸ் முடிவெடுத்துள்ளார்; 'அவர் ஆஜராக தேவையில்லை' என, அவரது வழக்கறிஞர், நவ., 4ல் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். ''ஆகவே, திட்டமிட்டு நீதிமன்றத்திற்கு வராத பட்னவிசுக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் எஸ்.டி.மேதா, வழக்கு விசாரணையை, ஜன., 4க்கு தள்ளி வைத்தார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201910:44:55 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இது தான் நேரம் என்பது இதே நிலை நாளை அசுவமேத சாணக்கியர் அமித் ஷா அவர்களுக்கு இறங்கியவுடன் வரும் எப்படி, மகனுக்கு 850 கோடி கூட்டுறவு வங்கியில் கடன் கொடுத்தார்கள் எப்படி கோலாட்டரில் செக்யூரிட்டி இல்லாமல் அவர் அதனை ஏன் உடனே திருப்பி செலுத்தணும் எது வெள்ளை கறுப்பாயிற்று என்று எல்லாம் ஓடமும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
Rate this:
Cancel
05-டிச-201907:57:33 IST Report Abuse
ஆப்பு அடப்பாவிங்களா...வழக்கை விசாரிக்காமலேயே அவுரு அஞ்சு வருஷம் முதல்வராகவும் இருந்து, இந்தமுறையும் 80 மணி நேரம் முதல்வரா இருந்துட்டாரே.. அடுத்த மஹாராஷ்ட்ரா தேர்தல் 2024 ல் வரும். அதுவரை ஒத்தி வெச்சிருங்க. வெளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X