பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் விழா மாறு வேடத்தில் அசத்தல்

Added : டிச 05, 2019
Share
Advertisement
சூலுார்:சூலுாரில் நடந்த விழாவில், மாறுவேடம் மற்றும் நடனபோட்டியில் மாற்றுத்திறனாளிகள் அசத்தினர்.சூலுார் வட்டார ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. சூலுார் தெற்கு பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்
 மாற்றுத்திறனாளிகள் விழா மாறு வேடத்தில் அசத்தல்

சூலுார்:சூலுாரில் நடந்த விழாவில், மாறுவேடம் மற்றும் நடனபோட்டியில் மாற்றுத்திறனாளிகள் அசத்தினர்.

சூலுார் வட்டார ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. சூலுார் தெற்கு பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாறுவேடம், நடனப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பரிசளிப்பு விழாவில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஜெய ஸ்ரீ, வட்டார கல்வி அலுவலர் இருதயமரிய ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்றுனர்கள் உமாராணி, பிரியதர்ஷனி, ஸ்வாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X