குப்பைக்கு மத்தியில் காய்கறி விற்பனை ஆக்கிரமிப்பை அகற்றாததால் கவலை

Added : டிச 05, 2019
Advertisement
 குப்பைக்கு மத்தியில் காய்கறி விற்பனை ஆக்கிரமிப்பை அகற்றாததால் கவலை

மேட்டுப்பாளையம்:அண்ணா மார்க்கெட்டில் குப்பைகளுக்கு மத்தியில், சுகாதாரம் இல்லாத இடத்தில், விவசாயிகள், பழங்களையும், காய்கறிகளையும் விற்பனை செய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

மேட்டுப்பாளையம் அண்ணாஜி சாலையில் உள்ள, அண்ணா மார்க்கெட்டில், வெளியூரிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, ஏலம் மூலம் விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தது. இங்கு, கான்கிரிட் தரை தளமும், விவசாயிகள் ஓய்வு எடுக்க அறைகளும், கழிப்பறைகளும் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த இடத்தை உள்ளூர் வியாபாரிகள் ஆக்கிரமித்து, பெரிய ெஷட் அமைத்து கடைகள் அமைத்துள்ளனர்.

இதனால், விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை, ஏலம் நடத்த இடமில்லாத நிலை ஏற்பட்டது. சில விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் பழம், காய்கறிகள், கீரைகளை, மார்க்கெட்டில் குப்பை குவிக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:'மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கலெக்டர் உத்தரவிட்டார். நகராட்சி அதிகாரிகள் இதுவரை கலெக்டரின் உத்தரவை மதிக்க வில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இங்கு குவிக்கப்படும் குப்பைகளையும், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்யாமல், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்கின்றனர்.அதனால் குப்பைகளுக்கு மத்தியில், காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X