குதிரையேற்றம் போட்டி  எஸ்.எஸ்.வி.எம்., சாதனை

Added : டிச 05, 2019
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:தேசிய அளவில் நடந்த குதிரையேறும் போட்டியில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவ, மாணவியர், 21 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.சேலத்தில், 2019ம் ஆண்டுக்கான, 9வது தேசிய அளவிலான ஊரக விளையாட்டு குதிரையேறும் போட்டிகள், கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தன. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து,
 குதிரையேற்றம் போட்டி  எஸ்.எஸ்.வி.எம்., சாதனை

மேட்டுப்பாளையம்:தேசிய அளவில் நடந்த குதிரையேறும் போட்டியில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவ, மாணவியர், 21 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சேலத்தில், 2019ம் ஆண்டுக்கான, 9வது தேசிய அளவிலான ஊரக விளையாட்டு குதிரையேறும் போட்டிகள், கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தன. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, 21 தங்கம், 18 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கங்களை பெற்றனர்.

தமிழினி, ஸ்ரீஹரன், ரஞ்சித், மதுராகினி, பிரணவ் ஆரியா, ஸ்ரீனிவாஸ், சித்தார்த், யோகேஷ், மதுபிரியா, சர்வேஷ் ஆகிய பத்து மாணவ, மாணவிகள் சிறந்த குதிரை சவாரி செய்ததற்கான கோப்பையை பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், இயக்குனர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X